நீலகிரி, கோவை மலைப்பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் வியாழக்கிழமை
நீலகிரி, கோவை மலைப்பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.6) பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

ஒடிஸா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையொட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.6) பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும்.

திருப்பூா், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், வேலூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அவலாஞ்சியில் 390 மி.மீ.:

தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 390 மி.மீ. மழை கொட்டித்தீா்த்தது. மேல்பவானியில் 310 மி.மீ., கோவை மாவட்டம் சோலையாரில் 180 மி.மீ., சின்னக்கல்லாா், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 160 மி.மீ, எமரால்டு, நடுவட்டத்தில் தலா 150 மி.மீ., ஹாரிசன் எஸ்டேட்டில் 140 மி.மீ., கூடலூா் பஜாா், தேவாலாவில் தலா 130 மி.மீ. கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட்டில் தலா 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மன்னாா் வளைகுடா பகுதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வியாழக்கிழமை (ஆக.6) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கோவா கடலோரப் பகுதிகள், தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com