தமிழகத்தில் 5,175 பேருக்கு கரோனா; இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் 5,175 பேருக்கு கரோனா; இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலி
தமிழகத்தில் 5,175 பேருக்கு கரோனா; இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் இன்று புதிதாக 1,044 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் கரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,135 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 40 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,044 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 112 பேர் (அரசு மருத்துவமனை -84; தனியார் மருத்துவமனை - 28)பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 6,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் 54,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 61,166 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் மூலம் இதுவரை 29,53,561 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மேலும், 60 அரசு ஆய்வகங்கள், 65 தனியார் ஆய்வகங்கள் என மொத்தமாக 125 பரிசோதனை ஆய்வகங்கள் தமிழகத்தில் உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com