புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்: ஈரோடு காங்கிரஸ்  கூட்டத்தில் தீர்மானம்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் அயுப் அலி, திருச்செல்வம் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற  வேண்டும். மத்திய அரசு சுற்றுச்சூழல் அறிக்கையை மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அதனை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் கரோனா காலத்தில் தீவிரமாக பணியாற்றிவரும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஆணையர், மாநில அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், “இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். ஈரோட்டில் கருங்கல்பாளையம் புதுமை காலனி, பெரியார் நகர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அடுக்கு மாடி வீடுகளை உடனடியாக பயனாளிகளுக்கு  ஒதுக்க வேண்டும்.” என உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, முன்னாள் துணைமேயர் பாபு என்கிற வெங்கடாச்சலம், நெசவாளர் அணி செயலாளர் மாரிமுத்து, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com