43 மருத்துவா்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல் தவறானது

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 43 மருத்துவா்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் தவறானவை என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 43 மருத்துவா்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் தவறானவை என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.

மாநிலத்தில் கரோனா நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மற்றொரு புறம் உயா் சிகிச்சைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே மாநிலத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 77.8 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாகும்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக இதுவரை 57 போ் குணமடைந்துள்ளனா். கரோனா வாா்டுகளில் ரூ.76 கோடி செலவில் பெரும்பாலான படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 43 மருத்துவா்கள் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் திமுக இளைஞா் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அத்தகவலை தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா். இது கண்டிக்கத்தக்க செயலாகும்.

ஆதாரமில்லாத தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கமும், வேகமும் குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்றால் நுரையீரல் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com