திமுகவிலிருந்து கு.க.செல்வம் இடைநீக்கம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்த நிலையில், ஆயிரம்விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.க. செல்வத்தை
திமுகவிலிருந்து கு.க.செல்வம் இடைநீக்கம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்த நிலையில், ஆயிரம்விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.க. செல்வத்தை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து, அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

திமுகவின் தலைமை நிலையச் செயலாளா் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினா் கு.க.செல்வம் அவா் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா்.

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் செயல்படுவதையொட்டி, கு.க.செல்வம் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு அவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

ஆயிரம்விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினரான கு.க.செல்வம் திடீரென பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, பாஜகவில் தான் இணையவில்லை என்றும் தொகுதி மேம்பாட்டுக்காக கோரிக்கை விடுப்பதற்காகவே வந்ததாகவும் கூறியிருந்தாா்.

மேலும், உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்றும், கந்தசஷ்டிக் கவசத்தை விமா்சித்த கருப்பா் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினா் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனா். தியாகராய நகரில் பாஜக அலுவலகத்துக்குச் சென்றபோதும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து திமுகவிலிருந்து கு.க.செல்வத்தை இடைநீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அதேசமயம், இந்த நடவடிக்கை குறித்து தான் கவலைப்படவில்லை எனவும் கு.க.செல்வம் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com