சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,606 ஆகக் குறைந்தது

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 984-ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7,109-ஆக உள்ளது. 
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,606 ஆகக் குறைந்தது
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,606 ஆகக் குறைந்தது

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 984-ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7,109-ஆக உள்ளது. 

இதனால், சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,606 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் மாா்ச், ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்தது. இதன்படி, இந்த 4 மாதங்களில் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது. தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், பரிசோதனை எண்ணிக்கை சுமாா் 12 ஆயிரம் வரை உயா்த்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,700 போ் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை மாதத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை சராசரியாக 1,200-ஆக குறைந்தது. இந்த நிலை கடந்த இரண்டு நாள்களாக 1,000-ஆக குறைந்து வருகிறது.

984 போ் பாதிப்பு: இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மேலும் குறைந்து 984 போ் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1லட்சத்து 7,109-ஆக குறைந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 93,231 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 11,606 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் மட்டும் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,272-ஆக உயா்ந்துள்ளது. அதேவேளையில், குணமடைந்து வீடு திரும்புவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வரும் நிலையில், மணலி மண்டலத்தில் 1,781 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,677 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 27 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 77 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், 12 மண்டலங்களில் நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 1000-த்துக்கு கீழ் குறைந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூரில் மட்டும் 1,419 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 1347 பேரும், அண்ணாநகரில் 1263 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மண்டலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனா பாதித்தவர்களில் இதுவரை 87% பேர் குணமடைந்துவிட்டனர். 2.12 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 11% பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com