ஊருக்கு ஒரு குளம்: புதிய குளங்களை உருவாக்கும் ஈரோடு தொண்டு நிறுவனம்

ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் புது குளங்கள் உருவாக்கும் திட்டம் ஈரோட்டில் தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. 
A Pond for the City: Erode Charitable Trust creating new ponds
A Pond for the City: Erode Charitable Trust creating new ponds


ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் புது குளங்கள் உருவாக்கும் திட்டம் ஈரோட்டில் தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. 

ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளோடு சிருவங்காட்டுவலசு எனும் கிராமத்தில் தூர்ந்து போன நிலையில் யாருக்கும் பயனற்று நீர்த்தேக்கம் இன்றி இருந்த குளத்தை ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் குளத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி குலத்திற்கு நீர்வரும் பாதைகளை சரிசெய்து குளத்தில் நீர் தேக்கம் பணிகளை மேற்கொண்டுள்ளது அதற்கான பூமி பூஜை துவங்கியது. 

நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே வி ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் தலைவர்   சின்னசாமி வரவேற்புரை வழங்கினர். ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் நீர் மேலாண்மை குழுத்தலைவர் ராபின் திட்ட விளக்கவுரை ஆற்றினார். 

இவ்விழாவில், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி, குமாரவலசு ஊராட்சி மன்ற தலைவர்  இளங்கோ, ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் அறங்காவலர்கள் தர்மராஜ், யோகேஷ் குமார், அரசு அலுவலர்கள், மற்றும் ஊர்பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் சின்னசாமி தற்போது தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுபோன்ற பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் பொது மக்கள் தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்பினர் என அனைவரும் பங்களிப்புடன் சேர்ந்து செய்வதன் மூலம் பணி எளிதில் முடிவடையும் இதனைக் கருத்தில் கொண்டு எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் நீர்நிலை பாதுகாத்தல் நீர்நிலைகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். 

இதுவரை 45 குளம் குட்டை ஏரி ஓடை கால்வாய் மற்றும் தடுப்பணை போன்ற நீர்நிலைகளைச் சுத்தம் செய்தும் தூர்வாரி ஆழப்படுத்த நீர் சேமிக்க வழி வழி செய்துள்ளோம் அதன் தொடர்ச்சியாக இது 46வது நீர் நிலை மேம்பாடு ஆகும். இதற்கு அரசிடம் முறையாக அனுமதி பெற்றுச் செய்யப்படுகின்றது. இதற்குத் தேவையான நிதிகள் எங்களது பங்களிப்பு மட்டுமின்றி இந்த ஊர் பொது மக்களின் பங்களிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com