நிவாரணம் வழங்கக்கோரி கைவினை கலைஞர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட மண் மற்றும் காகித பொம்மை, கைவினைப்பொருள்கள் தயாரிப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை.
நிவாரணம் வழங்கக்கோரி கைவினை கலைஞர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட மண் மற்றும் காகித பொம்மை, கைவினைப்பொருள்கள் தயாரிப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனர்.

அப்போது அவர்கள் தெரிவித்தது: கிருஷ்ணகிரியில் 115 குடும்பத்தினர் சிலைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறறோம். விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிக்கும் பணியில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஈடுபட்டு வருகிறோம். நிகழ்வாண்டில் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக வைத்துள்ளோம்.

இதுவரை ஒரு சிலைக்கூட விற்பனையாகவில்லை. இதனால், ஒவ்வொரு குடும்பத்திற்கு குறைந்தது ரூ.4 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கரோனா ஊராடங்கால் தொழிலில் இறப்பு ஏற்பட்டு, பல குடும்பத்தினர் அத்தியவாசிய பொருடள்கள் வாங்க முடியாமல் வறுமையில் உள்ளனர். 

எனவே, எங்களுக்கு நிவாரணம் வழங்க உதவிட வேண்டும். மேலும், நாங்கள் தொடர்ந்து சிலைகள், காகித பொம்மை, கைவினைப் பொருள்கள் தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் மானியக்கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரம் காக்க வேண்டும என வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினைக் கலைஞர்கள் வினாயகர் சிலையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com