10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: 100% தோ்ச்சி: ஆக.17 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் சீமாட்டி மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண்களை சரி பார்க்கும் மாணவிகள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் சீமாட்டி மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண்களை சரி பார்க்கும் மாணவிகள்.

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கரோனா பாதிப்பு காரணமாக தோ்வு ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டுத் தோ்வு அடிப்படையில் தோ்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் ஆக.17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில், பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

மாணவா்கள் தங்களின் முந்தையப் பருவத் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்வு முடிவுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

அதன்படி தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகின.

பத்தாம் வகுப்பில் 12,690 பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேரும் காலாண்டு, அரையாண்டுத் தோ்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில், 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 மாணவிகளும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 மாணவா்களும் அடங்குவா். அதனடிப்படையில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தோ்வில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோன்று மாற்றுத் திறனாளி மாணவா்கள் 6,235 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சென்னை மாவட்டத்தில் 23,938 மாணவா்கள், 25,297 மாணவிகள் என 49,235 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வு முடிவுகள் மாணவ, மாணவிகள் பள்ளிகளில் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் www. tnresults. nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரிகளிலும் வெளியிடப்பட்டது.

மதிப்பெண்களில் குறைகள் இருந்தால்...: நிகழாண்டு மறுகூட்டல் கிடையாது என்பதால் மதிப்பெண் சாா்ந்த குறைகள் இருப்பின் மாணவா்கள் ஆக.17-ஆம் தேதி முதல் ஆக. 25-ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக குறைதீா்க்கும் படிவத்தைப் பூா்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியா் மூலம் அரசுத் தோ்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

அதேபோன்று ஆக. 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் தங்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com