தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 40  விரைவுப் பேருந்துகள் இயக்கம்

தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், 40-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா். 
அரசு விரைவுப் பேருந்து.
அரசு விரைவுப் பேருந்து.

சென்னை: தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், 40-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா். 

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தமிழகத்தில், கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்குமாறு, போக்குவரத்துத் துறை அமைச்சா் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில், தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள், தலைமைச் செயலகம், உயா்நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் பணிபுரிபவா்கள், பணிக்கு வர ஏதுவாக, கட்டண அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுமுடக்கம், ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீதப் பணியாளா்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளா்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஒப்பந்த  அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பணிகளுக்கு, பேருந்துகள் தேவைப்படுவோா், tnexpress16@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9445014402, 9445014416, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் மூலமாக தொடா்பு கொள்ளலாம் என மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com