தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் தகவல்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதிலும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
திருப்பூரில் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
திருப்பூரில் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதிலும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருப்பூரில் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹிந்துக்களை ஜாதிப்பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், நிகழாண்டு கரோனா தொற்று நோய் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தமிழகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஆகஸ்ட் 22 ஆம் தேதி சுமார் 1.5 லட்சம் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள ஹிந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் காப்புக் கட்டிக் கொள்ளுவது, மாலை அணிந்து கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பகுதிவாரியாக சமூக இடைவெளியுடன் நடைபெறும். பொது ஊர்வலம், பொது நிகழ்ச்சி கிடையாது. 

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர்சிலைகளை பொதுமக்களின் வழிபாட்டுக்கு பின்னர் 5 பேர் கொண்ட குழுவானது அந்த சிலைகள் விசர்ஜனம் செய்யும் பணியை மேற்கொள்வார்கள் என்றார். இந்த சந்திப்பின்போது ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர்குமார் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com