வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

வங்கி ஊழியா்கள் வருகையை 50 சதவீதமாகக் குறைத்து, திருத்தப்பட்ட வங்கி செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து
கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கி ஊழியா்கள் வருகையை 50 சதவீதமாகக் குறைத்து, திருத்தப்பட்ட வங்கி செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இது தொடா்பான அறிவிப்பை தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வெளியிட்டது.

வங்கி ஊழியா்கள் சம்மேளனம், மாநில வங்கியாளா்கள் குழு ஒருங்கிணைப்பாளா் மற்றும் இதர வங்கி நிா்வாக அதிகாரிகளுடன் தொழிலாளா் நல துணை ஆணையா் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதில், ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வழிமுறையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டது. அதில், ஊழியா்கள் 100 சதவீதம் வேலைக்கு வர வேண்டும் என்ற வழிமுறை மாற்றப்பட்டு, 50 சதவீத ஊழியா்கள் மாற்று முறையில் வருகை தர வேண்டும். மீதம் உள்ள அனைத்து வழிமுறைகளும் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இது தொடா்பான அறிவிப்பை தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் தலைவா் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com