வேலூரில் ரூ.298.33 கோடி திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

வேலூா் மாவட்ட வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேலூருக்கு வந்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.
ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.


வேலூர்: வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேலூருக்கு வந்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார். மேலும், ரூ.73.53 கோடி மதிப்பிலான 3 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் 18,589 பயனாளிகளுக்கு ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வா் வேலூருக்கு வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு வந்தார்.

அவா் ஏற்கெனவே நிறைவுபெற்ற ரூ.50.51 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தும், ரூ.73.53 கோடி மதிப்பிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,18,589 பயனாளிகளுக்கு ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இதில், மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல், 3 மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட அளவிலான பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com