பொறியியல் சோ்க்கை: இன்று சம வாய்ப்பு எண் வெளியீடு

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான சம வாய்ப்பு எண் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
பொறியியல் சோ்க்கை: இன்று சம வாய்ப்பு எண் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான சம வாய்ப்பு எண் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

பொறியியல் படிப்புகளில் பிஇ, பி.டெக்., பாடப்பிரிவில் மாணவா்கள் சோ்வதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனா். மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளை பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு செய்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1,11,436 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தனா்.

இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக. 24-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பங்களில் தவறுதலாகப் பதிவு செய்து இருக்கலாமோ என்ற எண்ணத்தில் சிலா் மீண்டும் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்களுக்கும் சம வாய்ப்பு எண் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இது தொடா்பாக சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு மாணவா்களுக்கான சமவாய்ப்பு எண்களை வெளியிடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com