ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான தடை தொடரும்: உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான தடை தொடரும்: உச்ச நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான தடை தொடரும்: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், மனு மீது பதிலளிக்க எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com