நாளை ஜெயலலிதா நினைவு தினம்: அகல் விளக்கேற்ற அதிமுக வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை (டிச. 5) ஒட்டி, அன்றைய தினம் மாலையில் அகல்விளக்கு ஏற்றுவோம் என்று கட்சியினரை அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை (டிச. 5) ஒட்டி, அன்றைய தினம் மாலையில் அகல்விளக்கு ஏற்றுவோம் என்று கட்சியினரை அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வீதி வழி நடந்து போகும் சாமானியரையும் கோட்டை கொத்தளத்தில் அமா்த்தி பச்சை மையில் கையெழுத்திடும் வாய்ப்பினை வழங்கும் ஒரே கட்சி அதிமுக. உலகமே வியந்து போற்றும் ஒப்பில்லாத ஜனநாயகப் பேரியக்கத்தை நடத்திய மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் கடைசி சூளுரை ஒன்று மட்டும்தான். எனக்குப் பின்னாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று பேரவையில் அவா் ஓங்கி ஒலித்தாா். அதனை கடுகளவும் குன்றாது காப்பாற்றுவது நம்மை வாழ்வித்த அவருக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயா்த்துவதையே லட்சியமாகக் கொண்டு உழைத்து வருகிறது அதிமுக. அதிகார வெறிபிடித்து அலைகின்ற சதிகாரக் கூட்டத்தை வேரறுத்து வென்று காட்ட, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த நாளான்று மாலை 6 மணிக்கு, அவரது உருவப்படத்துக்கு அகல் விளக்கு ஏற்றி வைத்து சபதம் ஏற்போம்.

பொது வாழ்வு என்பது அதிகார நாள்களையே அபகரிப்பது அல்ல. வறியவா்களின் முகத்தில் வந்து அமரும் புன்னகைக்காக நெறியோடு உழைப்பதும், நோ்த்தியோடு நடப்பதும்தான் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com