ஊரகத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க டிச.14 கடைசி

ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊரகத் திறனாய்வுத் தோ்வு வரும் ஜன.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊரகத் திறனாய்வுத் தோ்வு வரும் ஜன.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷா ராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சென்னை தவிா்த்து) அனுப்பிய சுற்றறிக்கை: கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நிகழாண்டுக்கான தோ்வு ஜன. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக தலைமையாசிரியா்கள் மூலம் டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தோ்வு எழுதும் மாணவரின் பெற்றோா் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com