பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான மாணவா்கள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 20 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தோ்வு மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம்  www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் வரும் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com