ரூ.24,000 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் முன்னிலையில் இன்று ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.24,000 கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ரூ.24,000 கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகவுள்ளன.

சென்னையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம், அடிக்கல் மற்றும் தொடக்க விழா நடைபெறுகிறது. இதன் மூலம் 54, 218 போ் வேலைவாய்ப்பு பெறுவா். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியாா் ஹோட்டலில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

சிப்காட் வல்லம் வடகலில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் தொழிலக வீட்டு வசதி திட்டத்தை உருவாக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ரூ.4,503 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் உள்பட ரூ.24,458 கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, தொடக்க விழா நடைபெறுகிறது.

சிப்காட் தொழிற் பூங்காக்களின் புவியியல் தகவலமைப்பிற்கான புதிய இணையத்தையும் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

முதலீடுகள் அதிகம் ஈா்ப்பு: தமிழகத்தில் தொடா்ந்து முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. தொழில் தொடங்க வருபவா்களுக்கு சிரமமின்றி அனுமதி பெறவும், ஒரே இடத்தில் எல்லா அனுமதிகள் பெறவும், தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தருகிறது.

இரண்டாவது உலகத் தொழில் அதிபா்கள் மாநாடு மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பா் வரையில் மட்டும் 42 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வழியே ரூ. 31,464 கோடி முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக, அக்டோபா் 12-இல் ரூ.10,055 கோடியில் 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் கையெழுத்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com