நம்நாடு திரைப்படத்தை திரையரங்கில் காண அதிமுகவினர் சிறப்பு ஏற்பாடு

எம்ஜிஆர் நடித்த நம் நாடு திரைப்படத்தை காண ரசிகர்களுக்குஅதிமுகவினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.இரவிச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆர் நடித்த நம் நாடு திரைப்படத்தை காண ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தும் அதிமுகவினர் .
அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.இரவிச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆர் நடித்த நம் நாடு திரைப்படத்தை காண ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தும் அதிமுகவினர் .


கிருஷ்ணகிரி: எம்ஜிஆர் நடித்த நம் நாடு திரைப்படத்தை காண ரசிகர்களுக்கு அதிமுகவினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த நம் நாடு திரைப்படம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள  நாகரசம்பட்டி கிராமத்தில் ராஜா திரையரங்கில்  திரையிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை காண வரும் அனைத்து ரசிகர்களுக்கும் அதிமுக வினர் சார்பில் தங்கள் செலவில் கட்டணத்தை முழுமையாக செலுத்தியுள்ளனர். 

டிசம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் 12 காட்சிகளுக்கும் ரசிகர்கள் இலவசமாக திரைப்படத்தை ரசிக்கலாம். மேலும் திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். 

அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.இரவிச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள், மக்கள் நீதி மய்யம தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோர் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் செயல்பாடு மக்களை கவரும் வகையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com