ரூ.12.87 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம்  மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம்  மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம் மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம்  மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது.

கால்நடை துறை மண்டல உதவி இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் கால்நடை துறை உதவி இயக்குநர் கோபி கிருஷ்ணன் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் முக்கரம்பாக்கம் கால்நடை மருத்துவர் முருகன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் தேவி சங்கர், ஏ.டி.நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், சரவணன், ஊராட்சி துணை தலைவர் எஸ்.வினோத்குமார் முன்னிலை வகித்தனர்

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர்  கோபால்நாயுடு, மாநில அதிமுக மீனவரணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் பங்கேற்று  மங்களம் கிராமத்தைச் சோ்ந்த 101 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள், கொட்டகை அமைத்தல், ஆடுகளை பராமரிக்க பயிற்சி பெறுதல், போக்குவரத்து, காப்பீடு உள்ளடங்கிய ஒவ்வொருக்கும் ரூ.12,750 மதிப்பில் மொத்தம் 12 லட்சத்து 87ஆயிரத்து மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் அரசு வழங்கும் இந்த ஆடுகளை பயனாளிகள் முறையாக வளர்த்து தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்வில் பேசிய மங்களம் ஊராட்சி தலைவர் சுரேஷ் மங்களம் ஊராட்சி மக்கள் ஆரணி ஆற்றை கடந்து அவர்கள் தேவைக்கு ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் தரைபாலம் இல்லாத சூழலில் 1கி.மீ சாலயை கடக்க பொதுமக்கள் 10 கி.மீ தொலைவு சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் பகுதியில் ஆரணி ஆற்றை கடக்க தரைபாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com