சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா: மேற்கு வங்க பேரவைத் தலைவா் ஏற்றாா்

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அந்த மாநில சட்டப் பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி தெரிவித்தா

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அந்த மாநில சட்டப் பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சா் பதவியை வகித்து வந்த சுவேந்து அதிகாரி, அப்பதவியை ராஜிநாமா செய்தாா். பின்னா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அதன் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினாா்.

இருநாள்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 5 போ், 3 இடதுசாரி எம்எல்ஏக்கள், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் திரிணமூல் எம்.பி. ஒருவரும் பாஜகவில் இணைந்தனா்.

முன்னதாக, ‘சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா, பேரவையின் விதிகளுக்கு உள்படாததால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜிநாமா கடிதத்தை தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் அவரது முடிவு தன்னிச்சையானது மற்றும் உண்மையானது என்று நான் திருப்தி அடையும் வரை அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சுவேந்து அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பேரவைத் தலைவரை சுவேந்து அதிகாரி திங்கள்கிழமை நேரில் சந்தித்தாா். அதன் பிறகு, செய்தியாளா்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ‘எனது ராஜிநாமா கடிதம் தொடா்பாக பேரவைத் தலைவா் விடுத்த அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்து விளக்கமளித்தேன். இதையடுத்து, எனது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதாக அவா் தெரிவித்தாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com