சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் நிரந்தரத் தீர்வு: கனிமொழி உறுதி

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைக்கு திமுக ஆட்சி அமைந்ததும் நிரந்தரத் தீர்வு காணப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சிவகாசியில் வியாழக்கிழமை தனியார் அச்சகத்தில் உள்ள தொழிலாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி
சிவகாசியில் வியாழக்கிழமை தனியார் அச்சகத்தில் உள்ள தொழிலாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைக்கு திமுக ஆட்சி அமைந்ததும் நிரந்தரத் தீர்வு காணப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை காலை திமுக எம்.பி. கனிமொழி சிவகாசி நகராட்சி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அச்சுத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார்.

அச்சுத் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

மக்களுக்கான சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக ஆட்சியில் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்கள் கனிமொழி எம்.பி.,யிடம், உலக அளவில் சீனப்பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய பட்டாசுகள் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்திய பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுத்தர வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு உள்ள கால நேரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி.,

"பட்டாசுத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எடுத்துக் கூறினீர்கள். அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்கும்போது அதில் தெளிவாக இருக்க வேண்டும். அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு புரிதல் இல்லாமல் எடுக்கும் முடிவு பல குடும்பங்களைப் பாதித்துவிடுகிறது. தமிழக அரசின் முடிவால் பட்டாசுத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள 2 லட்சம் பேரும் அதைச் சார்ந்து தொழில் செய்யும் 8 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் ஆழ்ந்து சிந்திக்காது எடுத்த அவசர முடிவால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பசுமைப் பட்டாசு குறித்து தெளிவான முடிவு இல்லை. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

அதேபோல், தூத்துக்குடி துறைமுகம் மூலம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்" என்றார். 

பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் அச்சகத் தொழிலாளர்களைப் சந்தித்த பின் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பு..

பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்னையை அரசு பெரிதாக கருதவில்லை, பட்டாசு தடைக்கு எதிராகவும் மத்திய அரசிடம் குரல் கொடுக்கவோ இந்த அரசு தயாராக இல்லை எனவும், 
பட்டாசு தடைக்கு எதிர்த்து தொடர்ந்து திமுக மட்டுமே குரல் கொடுத்து வருகிறது. 

தேர்தல் நேரங்களில் மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னையை திமுக தொடர்ந்து பேசி வருகிறது. தமிழகத்தில் படித்த ஆண்கள் பெண்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எந்தவித தொழில் முதலீடுகளும் வரவில்லை எனவும், இந்திய அளவில் தமிழகத்தில் தான் வேலையில்லா திண்டாட்டம் நிகழ்கிறது. 

அழகிரி மூன்றாம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக குறித்த கேள்விக்கு?
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் இது பற்றி கருத்து கூற அவசியமில்லை. 

அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக வாக்கு குறைய வாய்ப்பு உள்ளதா?
யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுக.,வின் வெற்றிவாய்ப்பை எதுவும் பாதிக்காது. 

அடிக்கல் நாயகனாக மட்டுமே முதலமைச்சர் இருக்கிறார் எந்தவித செயலையும் செய்து முடித்த பெருமை முதல்வருக்கு கிடையாது. திமுக தேர்தல் அறிக்கை எப்பொழுதும் சிறப்பு வாய்ந்ததாகவே உள்ளது அதை தலைவர் விரைவில் வெளியிடுவார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு எப்பவுமே திமுக முன்னிலை கொடுக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வருவது திமுக வாக்கு வங்கியைப் பிடிப்பதற்காக எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு?
இன்று திமுகவின் வெற்றியை முறியடிக்க பல வியூகங்கள் வகுக்கப்படுகிறது என்பது உண்மைதான். யாராலும் தடுக்க முடியாது திமுக வெற்றி என்பது உறுதி எனவும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலாளரும்,திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம்தென்னரசு,மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ் நகரச் செயலாளர் காளிராஜ் திருத்தங்கல் நகர செயலாளர் உதயசூரியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com