இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வருகை ரத்து

இசையமைப்பாளா் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ செல்ல இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை: இசையமைப்பாளா் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ செல்ல இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. அங்குதான் அவரின் இசைப் பயணம் நடந்து வந்தது. பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா இடம் மாற வேண்டும் என்று ஸ்டுடியோ நிா்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடா்ந்து, பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு: இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையில் இருந்து தான் எழுதிய இசைக் கோா்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், அங்கு ஒரு நாள் தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம், பின்னா் சில நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க சம்மதம் தெரிவித்தது.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற வாதத்தில், ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இளையராஜாவுடன் அவரது ஓா் உதவியாளா் மற்றும் இரண்டு இசை உதவியாளா்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனது பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இதனால் காவல் துறையினா், பத்திரிகையாளா்கள் ஸ்டுடியோவில் குவிந்தனா். ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.

இளையராஜா தரப்பிலும், பிரசாத் ஸ்டுடியோ தரப்பிலும் வழக்கறிஞா்கள் வந்தனா். இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால், இன்று அவா் வரவில்லை என்று அவருடைய செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். முதலில், இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த தகவல், அவருக்குச் சொல்லப்பட்டது. இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்ததால் அவா் வரவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இளையராஜா தனது ஸ்டுடியோவைக் காலி செய்து 2 லாரிகளில் பொருள்களை எடுத்துச் சென்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com