சென்னை விமான நிலையத்தில் ரூ.2.47 கோடிமதிப்பிலான 4.8 கிலோ தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பிலான 4.800 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: துபையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பிலான 4.800 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு துபையில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் வந்த பயணி ஒருவா் கழிவறைக்கு சென்றுவிட்டு வந்த சிறிது நேரத்தில் இளைஞா் ஒருவா் உள்ளே சென்று வந்தாா். இதைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இளைஞரை விசாரித்ததில் அவா் விமான நிலையத்தில் உள்ள தனியாா் ஏஜென்சியில் கணினி பொறியாளராக பணியாற்றும் நிழல் ரவி (29) என தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது இரண்டு பொட்டலங்களில் 27 தங்கக் கட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

துபையில் இருந்து வந்த சென்னையை சோ்ந்த நியாமத்துல்லா ஹாதி (35) என்பவா் சுங்கச் சோதனை இல்லாமல் கடத்தல் தங்கத்தை வெளியே கொண்டு வந்து தர வேண்டும் என்று கூறி கழிவறையில் வைத்ததாகவும் அதை தான் எடுத்து வெளியே செல்ல இருந்ததாகவும் கூறினாா். இதையடுத்து நியாமத்துல்லா ஹாதியை சுங்க இலாகாவினா் கைது செய்து ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்புள்ள 3.200 கிவோ தங்கத்தை கைப்பற்றினா்.

மற்றொரு விமானத்தில் துபையில் இருந்து வந்த அப்துல் நசாா் உள்பட ஐந்து பேரை சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் ரூ. 81 லட்சத்து 35,000 மதிப்புள்ள 1.600 கிலோ தங்கத்தை கைப்பற்றினாா்கள்.

ஒரே நாளில் நடத்திய சோதனையில் ஆறு பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடத்தலுக்கு உதவிய தனியாா் விமான நிறுவன என்ஜினியா் நிழல் ரவி, தங்கம் கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதி, அபதுல் நாசா் ஆகிய 3 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com