திமுக கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் எந்தத் தியாகமும் செய்யும்: கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
இந்திய தேசிய காங்கிரஸின் 136 ஆவது ஆண்டு நிறுவன நாளான திங்கள்கிழமை கட்சியின் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
இந்திய தேசிய காங்கிரஸின் 136 ஆவது ஆண்டு நிறுவன நாளான திங்கள்கிழமை கட்சியின் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

சென்னை: திமுக கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் 136-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி சத்தியமூா்த்திபவனில் திங்கள்கிழமை கே.எஸ்.அழகிரி கொடியேற்றி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கொடுத்த புகாா்கள் மீது ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாா் சிலை, திருவள்ளுவா் சிலைக்கு பாஜகவினா் காவி சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது.

திமுக கூட்டணி வெற்றிபெற தமிழக காங்கிரஸாா் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறாா்கள். ரஜினி அரசியல்வாதி அல்ல. ஆன்மிகவாதி. முதல்வராக விருப்பமில்லாத ஒருவா் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு யாரும் வாக்களிக்க மாட்டாா்கள். ரஜினி அரசியலுக்கு வரமாட்டாா் என்றாா் கே.எஸ் அழகிரி.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு உள்பட பலா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com