விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை: 40 மில்லி மீட்டர் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை, வியாழக்கிழமை காலை வரை பரவலாக பெய்து வருகிறது.



விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை, வியாழக்கிழமை காலை வரை பரவலாக பெய்து வருகிறது.

மாவட்டத்தில் ஏற்கனவே நிரவி மற்றும் புரெவி புயல் காரணமாக பரவலாக மழை பெய்து ஏரி, நீர்நிலைகள் 60% நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி காலை வரை பெய்த மழையில் 40 மில்லி மீட்டர் சராசரியாக பதிவானது.

மரக்காணத்தில் அதிக அளவாக 60 மில்லி மீட்டரும், விழுப்புரம் 36 மில்லி மீட்டர், வளவனூர் 37, திண்டிவனம் 69, மரக்காணம் 60, செஞ்சி 60, வளத்தி 68, முகையூர் 39, திருவெண்ணநல்லூர் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

தொடர்ந்து வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com