சிதம்பரம் ஆதிமூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ உமையபார்வதி சமேத ஶ்ரீ ஆதிமூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.5) புதன்கிழமை காலை 9.40 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரம் ஆதிமூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ உமையபார்வதி சமேத ஶ்ரீ ஆதிமூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.5) புதன்கிழமை காலை 9.40 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஶ்ரீ ஆதிமூலநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ஜன.29-ம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கியது. ஜன.30-ம் தேதி கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், இரவு வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது. ஜன.31-ம் தேதி ஆச்சார்ய வர்ணம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரம், ப்ரதிஸரம், மதுபர்க்கம், ரக்‌ஷாபந்தனம் நடைபெற்றது. பிப்.1-ம் தேதி காலை பிரசன்னாபிஷேகம், மந்தரஜபம், கலாகர்ஷணம், கும்பஸ்தாபனம், விசேஷ ந்யாஸ அர்ச்சனை, தீபாராதனை. மாலை முதல் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. 

பிப்.2-ம் தேதி ஞாயிறு காலை, மாலை- இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. பிப்.3-ம் தேதி திங்கள்கிழமை காலை, மாலை நான்காம் மற்றும் ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது. பிப்.4-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, மதியம் மற்றும் இரவு ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது கால பூஜை நடைபெற்றது.

பிப்.5-ம் தேதி புதன்கிழமை காலை காலை கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை முடிவுற்ற பின்னர், யாகசாலையிலிருந்து காலை 9 மணிக்கு கட யாத்ராதானம் புறப்பட்டு விமான கலசத்தை அடைந்தது. 

பின்னர் காலை 09.40 மணிக்கு ஸ்ரீ உமையபார்வதி சமேத ஸ்ரீமூலநாதர் ஆலய விமான கலசத்திற்கு பொதுதீட்சிதர்கள் கும்பநீரை ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை விசேஷ யாக பூஜைகளுடன் மஹாபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. 

மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம், சிறப்பு யாக பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com