ஸ்ரீரங்கம் கோயில் தைத் தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் வடம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்தேரில் எழுந்தருளி சேவை சாதித்த நம்பெருமாள்
திருத்தேரில் எழுந்தருளி சேவை சாதித்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைத் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் நம்பெருமாள் தை தேர் திருவிழாவும் (பூபதி திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது) முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு தை தேர்த் திருவிழா கடந்த 30- ம்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு மண்டபத்தை வந்தடைந்தார். காலை 7 மணிக்கு தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சனிக்கிழமை (பிப்.8) சப்தாவரணம், ஞாயிற்றுக்கிழமை ஆளும்பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com