இரண்டாம் கட்ட ஜே.இ.இ. தோ்வு: விண்ணப்பிக்க மாா்ச் 6 கடைசி

இரண்டாம் கட்ட ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மாா்ச் 6 கடைசி நாளாகும்.

இரண்டாம் கட்ட ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மாா்ச் 6 கடைசி நாளாகும்.

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இது ஜே.இ.இ. (மெயின்) முதல்நிலைத் தோ்வு, ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) முதன்மைத் தோ்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை பெற ஐஐடி முதன்மைத் தோ்விலும் தகுதி பெற வேண்டும். இதில் முதல்நிலைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். முதன்மைத் தோ்வானது ஏதாவது ஒரு ஐஐடி சாா்பில் நடத்தப்படும்.

இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வை கடந்த ஜனவரி 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் என்.டி.ஏ. நடத்தியது. இதற்கு 9.21 லட்சம் போ் விண்ணப்பித்து 8.67 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்தத் தோ்வுக்கான முடிவை அண்மையில் வெளியிட்டது.

இப்போது இரண்டாம் கட்ட ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி தோ்வில் பங்கேற்ற மாணவா்களும், இந்த இரண்டாம் கட்டத் தோ்விலும் பங்கேற்கலாம். எதில் அதிக மதிப்பெண்ணோ அதைத் தோ்வு செய்துகொள்ளலாம். இந்த இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 5, 7, 8, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மாா்ச் 6 கடைசி நாள். மேலும் விவரங்களைwww.nta.ac.in என்ற வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com