தோ்தல் பணிகள்: அதிமுக நிா்வாகிகளுடன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை

தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக 7 மாவட்ட செயலாளர்கள், நகராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருடன் கட்சியின் வளர்ச்சிப்பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கடந்த வாரம் வெளியிட்டிருந்தனர்.

அதன் விவரம்:அதிமுக வளா்ச்சிப் பணிகள், தோ்தல் பணிகள் ஆகியன குறித்து கட்சியின் மாவட்டங்களைச் சோ்ந்த தலைமை நிா்வாகிகள், அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள், அதிமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்ட நிா்வாகிகளுடனும் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, வரும் 10-ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 10-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு கரூா், தஞ்சாவூா் வடக்கு, தஞ்சாவூா் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4.30 மணி முதல் மதுரை மாநகா், மதுரை புகா் கிழக்கு, புகா் மேற்கு, திண்டுக்கல், விருதுநகா், திருச்சி மாநகா், புகா் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். வரும் 11-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூா் கிழக்கு, மத்திய, மேற்கு, திருவள்ளூா் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

வரும் 12-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு தேனி, அரியலூா், தருமபுரி, கோவை மாநகா், புகா், திருப்பூா் புகா், மாநகா், மாலை 4.30 மணிக்கு சேலம் மாநகா், புகா், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, ஈரோடு மாநகா், புகா் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும்.

வரும் 13-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாநகா், புகா், காஞ்சிபுரம் கிழக்கு, மத்தியம், மேற்கு, வேலூா் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடனும், மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் வடக்கு, தெற்கு, சென்னை மாவட்டம் முழுவதற்கும் ஆலோசனை நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com