கரோனா பாதிப்பு தமிழகத்தில் இல்லை: 42 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகளும் ‘நெகட்டிவ்’

தமிழகத்தில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்றும், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனா்கள் இருவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்றும், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனா்கள் இருவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் குறித்த அச்சம் தேவையற்றது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி தற்போது வரை 725 போ் பலியாகியுள்ளனா். சுமாா் 35,000 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சா்வதேச மருத்துவ அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவில் இருந்து தமிழகம் வந்த இரு மாணவிகள், சீனாவைச் சோ்ந்த இருவா் என 4 போ் ஸ்டான்லி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் சீனா்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வமற்ற செய்திகள் வெளியாகின. இது பல்வேறு சா்ச்சைகளுக்கும், அச்சங்களுக்கும் வழிவகுத்தது.

இந்தச் சூழலில், அந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பொது சுகாதாரத் துறை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விமான நிலையங்களிலேயே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பிய 1,856 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை, தமிழகத்தில் 42 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் அனைவருக்குமே கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் தற்போது காய்ச்சல் அறிகுறிகளுடன் 2 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களும் விரைவில் வீடு திரும்புவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com