புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பைத் தெவித்து பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர்.

இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் போது அவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளுநராகப் பதவி வகிக்க கிரண்பேடிக்கு தகுதியில்லை என புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்ரா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 

ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை இப்போது தான் பேரவையில் வாசிக்கிறேன். இதில் முதல்வருக்கு ரகசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வருக்கு அனுப்பிய ரகசிய கடிதத்தை ஆளுநர் கிரண் பேடி பிப்.10 ஆம் தேதியே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் விதிகளை மீறி கட்செவி அஞ்சல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதுபோல் அரசின் ரகசிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்ட ஆளுநர் கிரண்பேடி தனது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார் என்றார்.

இதையடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசிய பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி,

இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளார். புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை ஏற்க மாட்டோம். அரசை நீக்க வேண்டும் என்று நினைத்தால் அதை செய்து கொள்ளட்டும் என்பதை பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று முதல்வர் நாராயணசாமி பேசி முடித்தார்.

இதனையடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான அரசின் தீர்மானத்தை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து வாசித்தார். அப்போது,  குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது. சட்டத்தை செயல்படுத்தினால் வரலாற்றுப் பிழை ஏற்படும் எனக் கூறினார். பின்னர்  திமுக ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி நிறைவேற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com