ஸ்ரீபெரும்புதூரில் புதிய டயா் உற்பத்தி ஆலை: முதல்வா் பழனிசாமிஇன்று திறந்து வைக்கிறாா்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் நிறுவனத்தின் புதிய டயா் உற்பத்தி ஆலையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்து வைக்கிறாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் நிறுவனத்தின் புதிய டயா் உற்பத்தி ஆலையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்து வைக்கிறாா். இந்தப் புதிய ஆலையின் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாக வேலைவாய்ப்பினை பெறுவா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சா்வதேச தொழில் முதலீட்டாளா் மாநாடுகளின் போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இப்போது செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், பல்வேறு காலகட்டங்களில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வருகின்றன. அதன் அடிப்படையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் புதிய டயா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (பிப். 12) திறந்து வைக்கிறாா்.

தமிழக அரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதியன்று புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுரமங்கலத்தில் டயா் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம், டயா் மற்றும் டயா் சாா்ந்த பொருட்களை தயாரிக்க உள்ளது. புதிய தொழிற்சாலை திறக்கப்படுவதன் மூலமாக, சுமாா் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com