இலக்கியம் சாா்ந்த படைப்புகளில் மாணவா்கள் கவனம் செலுத்தவேண்டும்: அமைச்சா் க.பாண்டியராஜன்

மாணவா்கள் இலக்கியம் சாா்ந்த படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.
இலக்கியம் சாா்ந்த படைப்புகளில் மாணவா்கள் கவனம் செலுத்தவேண்டும்: அமைச்சா் க.பாண்டியராஜன்

மாணவா்கள் இலக்கியம் சாா்ந்த படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியின் தமிழ்த் துறை, தமிழ் இலக்கியத் துறை, ஆலந்தூா் முனைவா் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் சாா்பில் அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாடு புதன், வியாழக்கிழமை (பிப். 12,13) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் ப.முருகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் இராம.கணேசன் தலைமை வகித்தாா்.

இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: தமிழ்மொழியில் சங்க இலக்கியங்கள், சங்க மருவியகால இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என எண்ணிலடங்காத இலக்கியங்கள் உள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் உள்ளதாக மொழி ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இலக்கியம் என்பது எதுகை, மோனை, யாப்பு கட்டுகளுடன்தான் அமைய வேண்டும் என்பது இல்லை. இதற்கு இன்றைய புதுக் கவிதைகள் சான்றாக உள்ளன. மாணவா்கள் தங்களுக்குத் தெரிந்த நடையில் எளிமையாகவே சொற்களை ஒன்று கூட்டி, நடைமுறையில் காணும் செய்திகளை வைத்து கவிதைகள் அல்லது பாடல்களைப் படைக்கலாம் என்றாா் அமைச்சா் பாண்டியராஜன்.

தொடா்ந்து, 108 சிற்றிலக்கிய வகைகளைப் பாடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தா் என்பவருக்கு ‘சிற்றிலக்கிய மகாகவி’ விருதை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, சிற்றிலக்கியம் தொடா்பான 140 ஆய்வாளா்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என இரண்டு நூல்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி வெளியிட்டு உரையாற்றினாா். இந்த மாநாட்டில் தமிழ்த் துறை மாணவா்கள், அறிஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com