இறுதி பட்டியல் வெளியீடு: திருப்பூர் மாவட்டத்தில் 23.14 லட்சம் வாக்காளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்களார் பட்டியலின்படி 23 லட்சத்து 01481 வாக்காளர்கள் உள்ளனர்
இறுதி பட்டியல் வெளியீடு: திருப்பூர் மாவட்டத்தில் 23.14 லட்சம் வாக்காளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்களார் பட்டியலின்படி 23 லட்சத்து 01481 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 17, 692 பேர் அதிகம் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.2019 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதிவரையில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் மற்றும் இணையம் வழியாக பெயர் சேர்க்க 54,178 மனுக்களும், பெயர் நீக்குதல் தொடர்பாக 2.347 மனுக்களும், பெயர் திருத்தம் தொடர்பாக 4,888 மனுக்களும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக 3,553 மனுக்களும் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்களால் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டது.2019 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

இதில் மாவட்டத்தில் உள்ள 2,484 வாக்குச்சாவடிகளில் 23 லட்சத்து 1,481 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 11 லட்சத்து 41,756 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 59,448 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 277 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 17,692 பேர் அதிகமாக உள்ளனர். தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்: தாராபுரம் (தனி)சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்துக்கு 25,792 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 13,903 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என 2 லட்சத்துக்கு 56,705 பேர் உள்ளனர். காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 23,834 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 29,814 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் என மொத்தம் 2 லட்சத்து 52,760 பேர் உள்ளனர். அவிநாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 312 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 34,405 ஆண் வாக்காளர்களும், ஒரு  லட்சத்து 40,464 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என 2 லட்சத்து 74,889 பேர் உள்ளனர். 

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 86,705 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 79,089 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 95 பேர் என 3 லட்சத்து 65,889 பேர் உள்ளனர். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 234 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 35,428 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 31,661 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என 2 லட்சத்து 67,118 பேர் உள்ளனர். பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 407 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு லட்சத்து 87,124 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 86,977 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 62 பேர் என 3 லட்சத்து 74,163 பேர் உள்ளனர். உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 293 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 28,282 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 36,550 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என 2 லட்டத்து 64,955 பேர் உள்ளனர். 

மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 287 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 20,186 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 23,890 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 16 பேர் என 2 லட்சத்து 44,092 பேர் உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியலின் நகர் மற்றும் குறுந்தகடுகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்கள் அனைத்து சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பதவி அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், சார் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இந்த வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதை பொதுமக்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், வருவாய் கோட்டாட்சியர் கவிதா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசிகள் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com