இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,15,498 வாக்காளர்கள் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு மொத்தம் 37,471 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,15,498 வாக்காளர்கள் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு மொத்தம் 37,471 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் முடிந்த பிறகு 2020க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி இதனை வெளியிட்டார். இதன்படி மாவட்டத்திலுள்ள வாக்காளர் மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம்

2020ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,51,682 ஆண் வாக்காளர்களும், 6,63,731 பெண் வாக்காளர்களும்,  85 திருநங்கைகளும் என மொத்தம் 13,15,498 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் மொத்தம் 12,78,598 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தில் 17,118 ஆண் வாக்காளர்கள்,  20,316 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 திருநங்கைகள் என மொத்தம் 37,471 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல சுருக்கமுறைத் திருத்தத்தில் 260 ஆண் வாக்காளர்கள், 311 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,537 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 85 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் 824 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

புதிய இளம் வாக்காளர்கள்

18 வயது நிறைவடைந்த புதிய இளம் வாக்காளர்களாக 5,239 ஆண் வாக்காளர்கள், 4,123 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 திருநங்கைகள் என மொத்தம் 9,367 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, டெய்சிகுமார், குணசேகர், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com