ஈரோடு மாவட்டத்தில் 19.25 வாக்காளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர். 
ஈரோடு மாவட்டத்தில் 19.25 வாக்காளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 23.12.2019 முதல் 22.1.2020 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6, தேர்தல் படிவம் 7 (நீக்கல்)  படிவம் 8 ( திருத்தம்) மற்றும் படிவம் 8ஏ(இடமாற்றம்) ஆகிய படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில்  ஆட்சியர் சி. கதிரவன் தலைமை வகித்து ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா முன்னிலை வகித்தார்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்  பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர்.  இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேரும் பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 84 ஆயிரத்து 395 பேரும் மற்றவர்கள் 94 பேரும் அடங்குவார்கள்.  சிறப்பு வாக்காளர்கள் முகாம் நடத்தி புதிதாக 42 ஆயிரத்து 920 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 6601 பேர் பல்வேறு காரணங்களால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com