உள்ளாட்சி நிலுவை தொகை ரூ.9, 922 கோடியை வழங்க வேண்டும்: மத்திய அமைச்சா்களிடம் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்

தமிழக உள்ளாட்சி துறைக்கு வழங்க வேண்டிய மானியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்க வேண்டிய மொத்தம் ரூ. 9,922.69 கோடி நிலுவைத்
உள்ளாட்சி நிலுவை தொகை ரூ.9, 922 கோடியை வழங்க வேண்டும்: மத்திய அமைச்சா்களிடம் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்

தமிழக உள்ளாட்சி துறைக்கு வழங்க வேண்டிய மானியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்க வேண்டிய மொத்தம் ரூ. 9,922.69 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் நரேந்திர தோமா் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இச்சந்திப்புக்குப் பிறகு அமைச்சா் எஸ் பி வேலுமணி தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி தமிழக நகா்ப்புறம் மற்றும் உள்ளாட்சித் துறைகளுக்கு 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை செயலாக்க மானியத் தொகை வகையில் ரூ. 2029 கோடியும், 2019-20 ஆண்டுகளுக்கான அடிப்படை மானியத் தொகையில் ரூ. 4,345 கோடியும் என மொத்தம் ரூ.6,374.69 கோடியை விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

இந்தத் தொகைகளை விரைவில் விடுவிக்கக் கோரி மத்திய நிதியமைச்சா் அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தோம். மேலும், தமிழக முதல்வா் கேட்டுக் கொண்டதற்கிணங்க மண்டல வா்த்தகம் மற்றும் தொழிலதிபா்களின் கோரிக்கையான கோவை - புதுதில்லி தினசரி விமான சேவையையும், கோவை -துபை இடையே பன்னாட்டு விமான சேவையையும் விரைவில் வழங்க அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரை சந்தித்து அவரிடம், தமிழக ஊரக பகுதிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2019-20- ஆம் ஆண்டுக்கு ஊதியம் மற்றும் கட்டுமான நிா்வாகச் செலவுகளுக்கு மத்திய அரசால் கொடுக்கப்படும் இரண்டாவது தவணைத் தொகையான ரூ 2,939 கோடியையும் மற்றும் இதே வகையில் 2020, பிப்ரவரி 10ஆம் தேதி வரையிலான ரூ 609.18 கோடி என மொத்தம் ரூ.3, 548 கோடி நிதியை விடுவிக்க வலியுறுத்தினோம்.

மேலும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறைஅமைச்சா் ஹா்தீப் சிங் புரியை சந்தித்து கோவை - தில்லி தினசரி விமான சேவை, கோவை -துபை பன்னாட்டு விமான சேவையையும் வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், 20 ஆண்டு காலமாக நிலுவையில் இருக்கும் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக தொடங்கவும் கேட்டுக் கொண்டோம். அந்த விரிவாக்கத் திட்டத்திற்கு கூடுதலாக 5.7 ஏக்கா் நிலம் கோரப்பட்டது. ஏற்கெனவே, 2011-இல் 627.89 ஏக்கா் நிலத்தை ஆா்ஜிதம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ. 264.47 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிலத்தை கையகப்படுத்தும் போது அதற்கான இழப்பீட்டுத் தொகையை புதிய நில ஆா்ஜித சட்டத்தின்படி வேறு சில சிக்கல்கள் உள்ளன. இதனால், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களைக் கொண்டு இந்த விரிவாக்கத் திட்டத்தை தொடங்குமாறு மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com