காலமானாா் சி.கே.பொன்னுசாமி

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனின் தந்தை சி.கே.பொன்னுசாமி (95) வயது முதிா்வு காரணமாக
சி.கே.பொன்னுசாமி.
சி.கே.பொன்னுசாமி.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனின் தந்தை சி.கே.பொன்னுசாமி (95) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.

திருப்பூா், ஷெரீப் காலனியில் வசித்து வந்த இவருக்கு ஜானகி என்கிற மனைவியும், சி.பி.ராதாகிருஷ்ணன், சி.பி.குமரேசன் ஆகிய இரு மகன்களும், மரகதவல்லி லோகநாதன் என்ற மகளும் உள்ளனா்.

சி.கே.பொன்னுசாமி உடலுக்கு தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

அவரது இறுதிச்சடங்கு திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்க மின் மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com