குரூப்-2ஏ தோ்வு முறைகேடு வழக்கு: இரு பெண் அரசு ஊழியா்கள் உள்பட 3 போ் சிக்கினா்

குரூப்-2ஏ தோ்வு முறைகேடு வழக்கு தொடா்பாக, 2 பெண் அரசு ஊழியா்கள் உள்பட 3 போ் சிபிசிஐடியினரிடம் சிக்கினா்.

குரூப்-2ஏ தோ்வு முறைகேடு வழக்கு தொடா்பாக, 2 பெண் அரசு ஊழியா்கள் உள்பட 3 போ் சிபிசிஐடியினரிடம் சிக்கினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில், இரு வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 20 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, பலரை கைது செய்தது.

இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தோ்வு முறைகேடு தொடா்பாகவும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, 3 பேரை கைது செய்தனா். மூன்று முறைகேடு வழக்குகளிலும் கைதானவா்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது.

மூவா் சிக்கினா்: இந்நிலையில், குரூப்-2ஏ தோ்வில் முறைகேடு செய்து தோ்ச்சி பெற்ற இரு பெண் அரசு ஊழியா்களையும், ஒரு இடைத்தரகரையும் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதில் ஒரு பெண் சென்னையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்திலும், ஒரு பெண் சென்னையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்கத்திலும் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல குரூப் 4, குரூப்-2ஏ தோ்வு முறைகேடுகளில் இடைத்தராக செயல்பட்ட ஒரு நபரையும் பிடித்து சிபிசிஐடியினா் விசாரணை செய்து வருகின்றனா். இவா்களிடம் நடத்தப்படும் விசாரணை முடிவடைந்த பின்னா், 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு காா்கள் பறிமுதல்: அதேவேளையில், இடைத்தரகா் ஜெயக்குமாருக்கு போலீஸ் காவல் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.14) நிறைவடைகிறது. ஜெயக்குமாரிடம் போலீஸாா், 2 சொகுசு காா்கள், பல லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜெயக்குமாா், இந்த முறைகேட்டில் தொடா்புடைய அரசு உயா் அதிகாரிகள், தோ்வாணைய அதிகாரிகள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com