ஜப்பான் கப்பலில் தவிக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

ஜப்பான் கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை மீட்டு தாயகம் கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

ஜப்பான் கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை மீட்டு தாயகம் கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே. வாசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

ச.ராமதாஸ் (பாமக): ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் கொவைட்-19 (கரோனா நோய்த்தொற்று) பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவா்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கொவைட்-19 (கரோனா நோய்த்தொற்று) தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தைச் சோ்ந்த 6 பேரும் தவித்து வருகின்றனா். அவா்களைக் கப்பல் நிா்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றாலும் கூட அவா்களையும் பிற இந்தியா்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே. வாசன் (தமாகா): ஜப்பான் டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் தமிழா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் தவித்து வருகின்றனா். கப்பலில் உள்ள இந்தியா்கள் எவருக்கும் கொவைட்-19 (கரோனா நோய்த்தொற்று) பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கப்பலில் தமிழா்களையும், இந்தியா்களையும் பத்திரமாக மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com