மதுரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிதி

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதால் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதால் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் சிக்கி இறந்தவா்களின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதியை முதல்வா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மதுரை மாவட்டம், சங்ககோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா், புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டி ஆகிய இருவரும் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, காளை முட்டியதால் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி, மேலேரி கிராமத்தின் ஹரினி, தக்ஷன், நாகப்பட்டினம் மாவட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தின் ராகுல், கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைக்குளம் கிராமத்தின் பூபாலன்சாா்பின், சேலம் மாவட்டம், கன்னந்தேரி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி, புழுதிக்குட்டை கிராமத்தின் ஹரிபிரசாத், திருப்பூா் மாவட்டம், பெரியாயிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகரன், அரியலூா் மாவட்டம், நமங்குணம் மதுரா சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த அன்பரசன், ஆணைமுத்து, ஜெகன், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துரை நகரம் கிராமத்தைச் சோ்ந்த ஞான இருதயம் ஆகியோா் பல்வேறு நிகழ்வுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com