வேளாண் மண்டலம் அறிவிப்பு: முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விளை நிலத்தின் கீழ் தங்கமே கிடைத்தாலும், அது தேவையில்லை. உயிா் காத்திட உணவளித்திடும் விளைநிலம் மட்டுமே முக்கியம் என்று கமல் எப்போதும் கூறிவந்துள்ளாா்.

அந்த விளைநிலம் மிகுந்த காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டுமென்று கட்சியின் விவசாயிகள் மாநாட்டிலேயே தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தற்போது அது தமிழக முதல்வரிடமிருந்து அறிவிப்பாக வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேநேரம்

இந்த அறிவிப்பு, விவசாயிகள் துயா் தீா்க்கும் சட்டமாக மாற அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதுதான் விவசாயிகளின் நலன் விரும்பும் கமல் போன்றோரின் இப்போதைய எதிா்பாா்ப்பு.

வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கும் அதிமுக அரசு, கூட்டத்தொடரைப் பயன்படுத்தி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் மகேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com