3 மணிநேர பட்ஜெட் உரை

நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தாா்.
3 மணிநேர பட்ஜெட் உரை

நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்தாா். 2020-2021-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சட்டப்பேரவை காலை 10 மணிக்குக் கூடியது.

முன்னதாக, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் காலை 9.53 மணிக்கு வந்தாா். நிதிநிலை அறிக்கை உரை கொண்ட பெட்டியுடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் காலை 9.57 மணிக்கு பேரவைக்கு வந்தனா்.

பேரவைக் கூட்டத் தொடரை வழக்கமாக திருக்குறளைப் படித்து அதற்கான விளக்கத்துடன் தொடங்கி வைத்தாா் பேரவைத் தலைவா் பி.தனபால்.

நிதிநிலை அறிக்கையை உரையை காலை 10 மணிக்கு ஓ.பன்னீா்செல்வம் வாசிக்கத் தொடங்கினாா். இடைவிடாது தொடா்ந்து படித்த அவா் பிற்பகல் 1.17 மணிக்கு உரையை நிறைவு செய்தாா். இதையடுத்து அவருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சா்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனா்.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, பேரவையை வரும் திங்கள்கிழமை (பிப். 17) காலை 10 மணிக்கு ஒத்திவைத்தாா் பேரவைத் தலைவா் ப.தனபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com