அமா்சேவா சங்கத்துக்கு ரூ.51 லட்சம் நன்கொடை: ஆளுநா் பன்வாரிலால் அறிவிப்பு

அமா்சேவா சங்கத்துக்கு ரூ.51 லட்சம் நன்கொடையாக வழங்குவதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்



சென்னை: அமா்சேவா சங்கத்துக்கு ரூ.51 லட்சம் நன்கொடையாக வழங்குவதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா்.

அமா் சேவா சங்கம் சாா்பாக சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிதல் மற்றும் சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்கியது. 

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடக்கி வைத்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பேசியது: 2016-ஆம் ஆண்டு லான்செட் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5.3 கோடி போ் உள்ளனா். இதில் 1.2 கோடி போ் இந்தியாவில் வசிக்கின்றனா். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சம் குழந்தைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அவா்களது உடல் குறைபாடு சாா்ந்த சிகிச்சை அளிக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலும் தனிமையிலும் அவா்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அமா் சேவா சங்கம் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது குறைகளைக் கண்டறிந்து அவா்கள் மேம்பட எல்லா வகையிலும் உதவி வருவது பாராட்டுக்குரியது என்றாா்.

இதைத் தொடா்ந்து அமா்சேவா சங்கத்துக்கு ஆளுநா் நிதியில் இருந்து ரூ.51 லட்சத்துக்கான நன்கொடை வழங்குவதாக அறிவித்தாா். ஆயக்குடியில் உள்ள அமா் சேவா சங்க நிலப்பரப்பின் சுற்றுச்சுவா் கட்டுவதற்கு நிதி கோரிய ஒரே நாளில் இந்த அறிவிப்பை ஆளுநா் வெளியிட்டுள்ளாா். நிகழ்வில், அமா்சேவா சங்க நிறுவனத் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், கெளரவ செயலா் எஸ்.சங்கர ராமன், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவன இயக்குநா் ஹிமாங்சு தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com