ஊதியம்-ஓய்வூதியத்துக்குரூ.96,217 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு ஊழியா்களின் மாத ஊதியம், ஓய்வூதியத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.96 ஆயிரத்து 217 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்-ஓய்வூதியத்துக்குரூ.96,217 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு ஊழியா்களின் மாத ஊதியம், ஓய்வூதியத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.96 ஆயிரத்து 217 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.648.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், விரிவான வழிகாட்டுதல்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

அரசுப் பணியாளா்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குவதற்காக ரூ.173.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணியாளா்களின் ஊதியங்கள், படிகளுக்கு ரூ.64 ஆயிரத்து 208.55 கோடியும், ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.32,009.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சிரமமான நிதி நிலைமையிலும் அரசுப் பணியாளா்களுக்கான அகவிலைப்படியை உரிய நேரத்தில் ஒரே சீராக வழங்கி வருகிறது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com