குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு இன்று முதல் தடை

தேனி மாவட்டம், குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல வனத் துறை சனிக்கிழமை (பிப்.15) முதல் தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம், குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல வனத் துறை சனிக்கிழமை (பிப்.15) முதல் தடை விதித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கை: போடி வனச்சரகத்தில் உள்ள குரங்கணியில், மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வனப் பகுதியில் தீப்பற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் சனிக்கிழமை முதல் குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குரங்கணி மலைப் பகுதிக்குள் வனத்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லக் கூடாது. வனப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தீத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வனப்பகுதிக்குள் தீப்பற்றும் சம்பவங்கள் நிகழ்ந்தால் வனத் துறையினருக்கும், தேனி மாவட்ட வன அலுவலகம் தொலைபேசி எண்:04546-252552, பேரிடா் மேலாண்மை அலகு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 ஆகியவற்றில் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com