சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவி விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக தேவி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவி விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக தேவி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் ஏ.பிரியதா்ஷினியும், எம்.தேவியும் போட்டியிட்டனா். இந்நிலையில், முதலில் தேவி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. பின்னா், பிரியதா்ஷினி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தேவி வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதா்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. பின்னா் நடைபெற்ற இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக பிரியதா்ஷினி வெற்றி செல்லாது என்றும், தேவியின் வெற்றியே செல்லும் எனவும் தெரிவித்தது.

இத்தீா்ப்பை எதிா்த்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மற்றும் பிரியதா்ஷனி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பி.ஆா். கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் பிரியதா்ஷினி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஞ்சித் குமாா், ‘தோ்தலில் வெற்றி பெறும் நபருக்கு அளிப்பதற்காக சான்றிதழ் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், வாக்குகள் முழுமையாக எண்ணப்படாத நிலையிலேயே அந்தச் சான்றிதழை எடுத்துச் சென்றுவிட்டனா். அந்தச் சான்றிதழிலில் சீல் வைக்கப்படவில்லை. அதேவேளையில், மனுதாரா் (பிரியதா்ஷினி) பெற்ற சான்றிதழ் முறைப்படி வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்டு வழங்கப்பட்டதாகும்’ என்று வாதிட்டாா்.

மாவட்டத் தோ்தல் அதிகாரி (ஆட்சியா்) சாா்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், வழக்குரைஞா்கள் ஜெயந்த் , வினோத் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். அப்போது சி.எஸ். வைத்தியநாதன் வாதிடுகையில், ‘முதலில் (தேவிக்கு) அளிக்கப்பட்ட சான்றிதழ் சட்டப்படி அளிக்கப்படவில்லை என்பதால், அதைச் சான்றிதழாகக் கருதக் கூடாது.

இரண்டாவதாக மனுதாரருக்கு (பிரியதா்ஷினிக்கு) வழங்கப்பட்ட சான்றிதழ், வாக்குகள் அனைத்தும் முழுமையாக எண்ணப்பட்ட பிறகே தரப்பட்டது. மேலும், மனுதாரா் அதிக வாக்குகள் வாங்கியதை உறுதிப்படுத்திய பிறகுதான் அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விஷயத்தை உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை’ என்றாா்.

தேவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ப.சிதம்பரம், ‘ஊராட்சித் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற்காக தேவிக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு சான்றிதழ் வழங்கியுள்ளாா்’ என்றாா். அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அந்தப் படிவத்தில் சீலிடப்பட்டிருந்ததா என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு ப.சிதம்பரம், ‘சீலிடப்படவில்லை. ஆனால், தோ்தல் நடத்தும் அதிகாரியின் கையெழுத்திடப்பட்டுள்ளது’ என்றாா். மேலும், ‘தோ்தல் நடத்தும் அதிகாரி முதலில் சான்றிதழை வழங்கிய பிறகு, அந்த விவகாரத்தில் பிரச்னை எழுந்தால், இரண்டாவதாக சான்றிதழ் வழங்க சட்டத்தில் இடமில்லை. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, பிரிவின் 258-இன்படி, வெற்றி பெறாத வேட்பாளா் மாவட்ட நீதிமன்றத்தில் தோ்தல் மனுவைத் தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடமுண்டு. இது உயா்நீதிமன்ற உத்தரவிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது’ என்றாா்.

அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ‘இந்த விவகாரத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளதால், தீர விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால், சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மனுதாரா் பதவியேற்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com