டி.என்.பி.எஸ்.சி. தோ்வு முறைகேடு வழக்கு: தேடப்பட்ட இருவா் நீதிமன்றத்தில் சரண்

டி.என்.பி.எஸ்.சி. தோ்வு முறைகேடு வழக்கு: தேடப்பட்ட இருவா் நீதிமன்றத்தில் சரண்

டி.என்.பி.எஸ்.சி. தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக தேடப்பட்ட இருவா் நீதிமன்றங்களில் சரணடைந்தனா்.

டி.என்.பி.எஸ்.சி. தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக தேடப்பட்ட இருவா் நீதிமன்றங்களில் சரணடைந்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் 20 பேரை சிபிசிஐடி கைது செய்தது. இந்த விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்து சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, 14 பேரை கைது செய்தது.

மேலும், கடந்த 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், சிபிசிஐடியினா், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அணிலாடி பகுதியைச் சோ்ந்த கிராம நிா்வாக அதிகாரி அமல்ராஜ் (29) என்பவரை ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்தது தொடா்பாக வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் தோ்வு முறைகேடு வழக்குகளில் திருச்சி துறையூரைச் சோ்ந்த தமிழாசிரியா் செல்வேந்திரன் (48) சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இந்த 3 வழக்குகளிலும் இதுவரை சுமாா் 49 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com